புனித வெள்ளி நாள் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை
ADDED :3527 days ago
திருத்தணி: புனித வெள்ளி நாளை முன்னிட்டு, கிறிஸ்தவர்கள் நேற்று, சர்ச்சுகளுக்கு சென்று, சிறப்பு பிரார்த்தனை நடத்தி வழிபட்டனர்.கிறிஸ்தவர்களின் முக்கிய நாட்களில் ஒன்றான புனித வெள்ளியை முன்னிட்டு நேற்று, திருத்தணி - அரக்கோணண்ஞிம் சாலையில் உள்ள, சி.எஸ்.ஐ.. மத்தேயு சர்ச், தெக்களூர் கிறிஸ்தவ வழிபாட்டு தலம், கே.ஜி.கண்டிகை, துாய மத்தேயு சர்ச் உட்பட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில், திரளான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து, பக்தி பாடல்கள் பாடி, பிரார்த்தனை செய்தனர்.