உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிளியூர் மகா மாரியம்மன் கோவில் தேரோட்ட விழா

கிளியூர் மகா மாரியம்மன் கோவில் தேரோட்ட விழா

உளுந்துார்பேட்டை:கிளியூர் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். உளுந்துார்பேட்டை தாலுகா கிளியூர் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 9:30 மணிக்கு கோவிலில் இருந்து தேரோட்டம் புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. மாலை 5.30 மணிக்கு கோவிலை சென்றடைந்தது. மாலை 6:00 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் கணேசன், ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !