குன்னுார் பங்குனி உத்திர திருவிழா: காவடி ஊர்வலத்தில் பரவசம்
ADDED :3527 days ago
குன்னுார்: குன்னுார் பால முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா நடந்தது. குன்னுார் அடுத்துள்ள ஓட்டுப்பட் டரை ஸ்டேன்லி பார்க் பகுதியில் உள்ள, பால முருகன் கோவிலில், நடப்பாண்டுக்கான, பங்குனி உத்திர திருவிழா நடந்தது. இதை தொடர்ந்து நடந்த, காவடி ஊர்வலம், பால முருகன் கோவிலில் இருந்து புறப்பட்டு, வெள்ளாளபுரம், விநாயகர் கோவில், தவிட்டு மாரியம்மன் கோவில், ஓட்டுப்பட்டறை விநாயகர் கோவில் வழியாக பால முருகன் கோவிலை வந்தடைந்தது. பகல்,11:00 மணிக்கு, அபிஷேக ஆராதனை முடிந்தவுடன், அன்னதான நிகழ்ச்சி நடந்தது.