கோட்டூர் முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா
ADDED :3516 days ago
தேவகோட்டை: கோட்டூர் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி முளைப்பாரி திருவிழா நடந்தது. காப்புகட்டுதலுடன் துவங்கி தினமும் சிறப்பு பூஜை, விளக்கு பூஜை நடந்தது. பால்குடம் எடுத்து வழிபட்டனர். பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடந்தது. மக்கள் முளைப்பாரி எடுத்து வந்து அம்மனை தரிசித்தனர். நிறைவு நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.