செல்லாயி அம்மன், அய்யனார் கோயில் பங்குனித் திருவிழா
ADDED :3519 days ago
ஊமச்சிகுளம்: மதுரை ஊமச்சிகுளம் அருகே திருமால்புரம் செல்லாயி அம்மன், அய்யனார் கோயில் பங்குனித் திருவிழா மூன்று நாட்கள் நடந்தது.முதல் நாள் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் மண்ணாலான சாமி பொம்மைகளுடன் கூழப்பாண்டி விலக்கிலிருந்து கோயிலுக்கு ஊர்வலம் சென்றனர். இரவு நாடகம் நடந்தது. 2ம் நாள் ஏராளமான பக்தர்கள் பொங்கல் மற்றும் மாவிளக்கு வைத்தனர். மூன்றாம்நாள் அம்மன் மற்றும் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன.