பெரியரெட்டியபட்டியில் பங்குனி திருவிழா
ADDED :3519 days ago
வடமதுரை: சிங்காரகோட்டை ஊராட்சி பெரியரெட்டியபட்டியில் விநாயகர், முருகன், மாரியம்மன், காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா நடந்தது. கடந்த 20ம் தேதி சாட்டுதலுடன் துவங்கிய விழாவில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். அம்மன் கொலுவில் வைத்தல், கரகம் பாலித்தல், பாரிவேட்டை போன்ற வழிபாடுகளும், பக்தர்கள் பொங்கல் வைத்தும், தீச்சட்டி, மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சிகளும் நடந்தன. இறுதி நாளில் மஞ்சள் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலை சென்றது.