கீழ் அனுவம்பட்டு மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத உற்சவம்
                              ADDED :5177 days ago 
                            
                          
                          
கிள்ளை : சிதம்பரம் அருகே கீழ் அனுவம்பட்டு சாலைக்கரை முத்துமாரியம்மன் கோவிலில் ஆவணி மாத உற்சவம் நடந்தது. சிதம்பரம் அடுத்த கீழ் அனுவம்பட்டு சாலைக்கரை முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் சிறப்பு உற்சவம் நடந்து வருகிறது. இந்த ஆண்டு உற்சவத்தை முன்னிட்டு கடந்த 23ம்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நடந்து வந்தது. 26ம் தேதி மாலை 6 மணிக்கு வெள்ளாற்று வடிகாலில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு கோவிலை சென்றடைந்தது. இரவு வானவேடிக்கை மற்றும் சிறப்பு அலங்கார ஆராதனை நடந்து. சுற்றுப்பகுதியினர் சுவாமி தரிசனம் செய்தனர். 27ம் தேதி காலை சுவாமி வீதியுலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது.