உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ப.வேலூர் விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழா

ப.வேலூர் விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழா

ப.வேலூர்: ப.வேலூர் அருகே, காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழா ஏப்.,3ல் நடக்கிறது.

ப.வேலூர் அடுத்த, பாண்டமங்கலத்தில் காசிவிஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 30ம் தேதி, கணபதி யாகத்துடன் துவங்கியது. ஏப்.,2ல் காலை யாக பூஜையும், இரண்டாம் கால பூர்ண பூஜையும், மாலையில் மூன்றாம் கால பூர்ண பூஜையும் நடக்கிறது. ஏப்., (3ம் தேதி)
காலை, 8 மணிக்கு காசி விஸ்வநாதர் விசாலாட்சி, கல்யாண சுப்ரமணியருக்கு கும்பாபிஷேகம்
மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !