விழுப்புரம் அம்மன் கோவிலுக்கு கோபுரகலசம் வழங்கல்
ADDED :3520 days ago
விழுப்புரம்: மோட்சகுளம் சாந்த மகாகாளியம்மன் கோவிலில், கோபுர கலசங்கள் வழங்கும்
நிகழ்ச்சி நடந்தது.
மோட்சகுளம் கிராமத்தில் உள்ள சாந்த மகா காளியம்மன் கோவிலில், வரும் 11ம் தேதி
கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி, வடக்கு மாவட்ட அ.தி.மு.க., மருத்துவர் அணி
தலைவர் கலைசெல்வம் தலைமையிலான நிர்வாகிகள் கோவில் கோபுரத்திற்கு, புதிய
கலசங்களை வழங்கினர். மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர் தனுசு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிவக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வெங்கடசாமி, பட்டு விற்பனையாளர் சானியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.