ஈரோடு மாரியம்மன் வகையறா கோவிலில் பூங்கரகம் எடுத்து பெண்கள் ஊர்வலம்
ADDED :3520 days ago
ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில் குண்டம் தேர்த்திருவிழாவை ஒட்டி,
மாநகரின் மிகப் பெரிய காய்கறி மார்க்கெட்டான நேதாஜி மார்க்கெட்டை சேர்ந்த வியாபாரிகள்,
ஆண்டு தோறும் மாரியம்மனுக்கு தீர்த்தம் எடுத்து, மேள தாளத்துடன் ஊர்வலமாக சென்று
நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதன்படி நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள், குடும்பத்தினருடன் தீர்த்தக்குடம், கரகம் சுமந்து நேற்று ஊர்வலமாக சென்றனர். இதில் பெண்கள்
பலர் பூங்கரகம் எடுத்து வந்தனர். இதனால் நேதாஜி காய்கறி மார்க்கெட்டில், பெரும்பாலான
கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.