உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்றுடன் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் விழா நிறைவு

இன்றுடன் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் விழா நிறைவு

ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, மாவிளக்குடன் ஏராளமான பெண்கள் ஏப்.,1ல் குவிந்தனர்.

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழாவில், கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. விழா இறுதி நாள் என்பதாலும், வெள்ளிக்கிழமை என்பதாலும்,  ஏப்.,1ல் பக்தர்கள் குவிந்தனர். மாவிளக்கு மற்றும் தீர்த்தக்குடம் சுமந்து வந்த பெண்கள், நீண்ட வரிசையில் தரிசனத்துக்கு காத்திருந்தனர். இதேபோல் அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் ஏராளமான பக்தர்கள் வந்தனர். கோவிலுக்கு எதிரே ரோட்டின் ஒரு புறம், நீர்மோர் பந்தல் மற்றும் தொண்டு நிறுவனங்கள், தனியார் சார்பில் அன்னதானம், கூழ் வழங்கப்பட்டது. இதைப் பெற மக்களும், பக்தர்களும் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து ஏற்கனவே எச்சரித்திருந்தும், போலீசார் கண்டு கொள்ளவில்லை. வரும் ஆண்டுகளிலாவது நீர் மோர் பந்தல், அன்னதானம், கூழ் ஊற்றுதல் போன்றவற்றை கோவில் விழா பந்தலுக்கு வெளியே வைக்குமாறு போலீசார் கூற வேண்டும். இவ்வாறு செய்தால், போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். கம்பம் எடுத்தல், மஞ்சள் நீராடுதல் உள்ளிட்டவற்றுடன் விழா, இன்று நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !