தோகமலை பாம்பாலம்மன் கோவில் விழா
ADDED :3520 days ago
தோகமலை: தோகமலை பஞ்சாாயத்து யூனியனுக்கு உட்பட்ட தளிஞ்சி பாம்பாலம்மன் கோவில்
திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
கரூர் மாவட்டம், தோகமலை பஞ்சாயத்து யூனியன் தளிஞ்சி பாம்பாலம்மன் கோவில் திருவிழா நடந்தது. ஏப்.,1 முன்தினம், பக்தர்கள் பால்குடம் எடுத்தல், பெண்கள் பொங்கல் வைத்தல், தீச்சட்டி ஏந்தி வருதல், மாவிளக்கு போட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி சுவாமியை வழிபட்டனர். அன்றிரவு, வாணவேடிக்கை, சுவாமி முத்துப்பல்லக்கில் வீதியுலா, பக்தர்கள் நேர்த்திக்கடன் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.