முத்தாலம்மன் கோயில் திருவிழா
ADDED :3519 days ago
நிலக்கோட்டை: சித்தர்கள்நத்தம் முத்தாலம்மன் கோயில் திருவிழா நடந்தது. செவ்வாயன்று லட்சுமிபுரத்தில் இருந்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நடந்தது. புதன்கிழமை காலை மாவிளக்கு பூஜை, தீர்த்தக்காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். வியாழக்கிழமை தீச்சட்டி எடுத்தல், கிடா வெட்டுதலுடன் அம்மனுக்கு பொங்கல் படைத்து வழிபட்டனர். அன்று மாலை மஞ்சள் நீராட்டுன் அம்மன்பூஞ் சோலை சென்றடைந்தார். மூன்று நாள் இரவு நாடகம், வாணவேடிக் கை, நையாண்டி மேளம், கரகாட்டத்துடன் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.