உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ வினாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

செல்வ வினாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

உத்திரமேரூர்: திருப்புலிவனத்தில், செல்வ வினாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனத்தில், பழமையான செல்வ வினாயகர் கோவில் உள்ளது. இக்கோவில், கடந்த சில மாதங்களாக சீரமைக்கப்பட்டு வந்தது. அப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, நேற்று காலை, 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில், அப்பகுதி கிராமவாசிகள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !