உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் ஏலவார்குழலி சிலை தயாரிப்பு துவக்கம்!

காஞ்சிபுரம் ஏலவார்குழலி சிலை தயாரிப்பு துவக்கம்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில்  தற்போதுள்ள உற்சவர் சிலைக்கு மாற்றாக, புதிய சிலை செய்வதை தொடர்ந்து, அம்பாள் சிலையும் புதிதாக செய்யப்பட உள்ளது.  காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவில் உற்சவர் சிலை, 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என, கூறப்படுகிறது. உற்சவர் சிலையின் பீடத்தில் சேதம் அடைந்துள்ளதாலும், அம்மன் சிலையின் கை விரல் தேய்மானம் அடைந்துள்ளதாலும் அதை மாற்றி, புதிய உற்சவர் சிலை செய்ய, கோவிலை நிர்வகிக்கும் இந்து அறநிலையத்துறை முடிவு செய்தது.  இதற்கு உபயதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், புதிய உற்சவர் சிலை செய்யும் பணி, கடந்த டிசம்பர் மாதம் துவங்கியது. அந்த சிலை, 60 கிலோ எடை அளவு கொண்டதாகவும், பீடம், 40 கிலோ எடையுடன் இருக்கும் என, கூறப்படுகிறது. இந்நிலையில், ‘சுவாமிக்கு புதிய உற்சவர் சிலை செய்தால், அம்பாள் சிலையும் மாற்ற வேண்டும்’ என, கோவில் ஸ்தானீகர்கள், குருக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் படி, அம்பாள் ஏலவார்குழலி சிலையும் புதியதாக செய்ய  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அம்பாள் சிலையில் அளவு எடுக்கப்பட்டு, அதன் மாதிரி மெழுகு சிலையை தயாரித்து, அதனுடன் அம்பாள் உற்சவர் சிலையுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !