கண்டாச்சிபுரம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா
ADDED :3519 days ago
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது. கண்டாச்சிபுரம் மடவிளாகம் பகுதியில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. முன்னதாக காலை 10:00 மணியளவில் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலை அரவான் பலி நிகழ்ச்சியும், 7:00 மணியளவில் தீமிதி திருவிழாவும் நடந்தது. பின்னர், பூங்கரவ ஊர்வலத்துடன் அம்மன் ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு, நேர்த்தி கடனை நிறைவேற்றினர். இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா சுப்ரமணியன், பாலகிருஷ்ண சிவாச்சாரியார் மற்றும் மடவிளாகம் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.