உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தரங்குடியில் வரும் 8ல் பங்குனி களரி துவக்கம்

சித்தரங்குடியில் வரும் 8ல் பங்குனி களரி துவக்கம்

ராமநாதபுரம்: முதுகுளத்துார் ஒன்றியம் சித்திரங்குடி சீலைக்காரி அம்மன் கோயிலில் பங்குனி களரி விழா ஏப்., 8ல் துவங்குகிறது. இதைமுன்னிட்டு அன்று அதிகாலை கணபதி, நவக்கிரக, சுதர்சன, லட்சுமி, சீலைக்காரி சக்தி ஹோமங்கள் நடக்கின்றன. அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடத்தப்பட்டு தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. இரவு களரி உற்சவ பூஜை நடக்கிறது. ஏப்., 10ல் காலை பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. மாலை 3 மணிக்கு பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை விஸ்வகர்மா உறவின் முறை நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !