உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் சிறப்பு ஆராதனை

திருமலையில் சிறப்பு ஆராதனை

திருப்பதி: திருமலையில், அன்னமாச்சார்யாரின், 513வது நினைவு தினத்தை முன்னிட்டு, சிறப்பு ஆராதனை நடந்தது. திருமலை ஏழுமலையானின் தாசரும், தெலுங்கு கவிஞருமான, அன்னமாச்சார்யாரின், 513வது நினைவு தினத்தை முன்னிட்டு, திருமலை, திருப்பதி மற்றும் அன்னமாச்சாரியார் பிறந்த ஊரான தாளபாக்கத்திலும், கர்நாடக இசைக் கலைஞர்களின், சிறப்பு ஆராதனை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடந்தன.மாலை, திருமலையில் உள்ள, நாராயணகிரி உத்யான வனத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளினார். அங்குள்ள அன்னமாச்சாரியார் நினைவிடத்தில், பாடல்கள், சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடந்தன. ஆந்திர கவர்னர் நரசிம்மன் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !