படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் பூமிக்கடியில் பூஜை பொருட்கள் கண்டெடுப்பு!
ADDED :3519 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், படவேடு ரேணுகாம்பாள் கோவிலில், பக்தர்களுக்கு நிழல் பந்தல் அமைக்க, நேற்று முன்தினம் கருவறையின் வடக்கே பள்ளம் தோண்டினர். அப்போது, 3 அடி ஆழத்தில் பழங்கால செம்புகளால் ஆன பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், பெரியதாக பள்ளம் தோண்டிய போது, செம்பு, பித்தளையாலான தட்டு, மணி, ஆரத்தி தட்டு என, 150க்கும் மேற்பட்ட சிறு, சிறு பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதை ஏராளமான பொதுமக்கள் பார்த்து சென்றனர். இந்த பொருட்களை, படவேடு ரேணுகாம்பாள் கோவில் செயல் அலுவலர் பெரியமருதுபாண்டியன், தாசில்தார் புவனேஸ்வரி, மண்டல துணை தாசில்தார் மணி ஆகியோர் பார்வையிட்டு, போளூரில் உள்ள கருவூலத்தில் பூஜை பொருட்களை ஒப்படைத்தனர்.