உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி நடயேட்டி மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா

சக்தி நடயேட்டி மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா

ஈரோடு: ஈரோடு கீழ் திண்டல் பெரியார் காலனியில், சக்தி நடயேட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி மாதம் தோறும் பொங்கல் பண்டிகை நடக்கிறது. ஆறாம் ஆண்டாக பொங்கல் விழா, கடந்த, 29ம் தேதி துவங்கியது. காவிரியில் இருந்து தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிலையில் பொங்கல் வைபவம், பூச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல், மாவிளக்கு பூஜை இன்று நடக்கிறது. இரவு, 12 மணிக்கு கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (7ம் தேதி) மஞ்சள் நீர் உற்சவம், அம்மன் திருவீதி உலா, மறுபூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !