ஆஞ்சநேயர் கோவிலில் தீ மிதி விழா
ADDED :3519 days ago
நாமகிரிப்பேட்டை: மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் தீ மிதி விழா, வரும், 10ம் தேதி நடக்கிறது. நாமகிரிப்பேட்டை அடுத்த, மெட்டாலாவில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் தீ மிதி விழா ஆண்டுதோறும் பங்குனி, கடைசி ஞாயிற்றுக்கிழமை நடக்கும். இந்த ஆண்டு விழா வரும், 10ம் தேதி நடக்கிறது. முன்னதாக, 9ம் தேதி காலை, 10 மணிக்கு சீராப்பள்ளி செவ்வந்தீஸ்வரர் கோவிலில் இருந்து ஆஞ்சநேயர் உற்சவர் சிலை ஊர்வலமாக எடுத்து வருகின்றனர். மறுநாள் காலை புஷ்ப பல்லக்கில் நாமகிரிப்பேட்டையில் ஆஞ்சநேயர் திருவீதி உலாவும், பகல், 1 மணிக்கு மெட்டாலா கன்னிமார் ஊற்றிலிருந்து சுவாமி சக்தி அழைத்தலும், மாலை, 4 மணிக்கு அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.