பங்குனி அமாவாசை: அக்னி தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!
ADDED :3673 days ago
ராமேஸ்வரம்: பங்குனி அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். பங்குனி அமாவாசையான நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்தனர். தொடர்ந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு புரோகிதர்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். தொடர்ந்து கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடியபின் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனை தரிசித்தனர்.