உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மொரட்டாண்டி பிரத்தியங்கிரா கோவிலில் சத்ரு சம்ஹார பரிகார ஹோமம்!

மொரட்டாண்டி பிரத்தியங்கிரா கோவிலில் சத்ரு சம்ஹார பரிகார ஹோமம்!

புதுச்சேரி: மொரட்டாண்டி பிரத்தியங்கிரா காளி கோவிலில், பங்குனி அமாவாசையை முன்னிட்டு,  ‘சர்வ சத்ரு சம்ஹார பரிகார ஹோமம்’ நேற்று  நடந்தது. புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான மொரட்டாண்டியில் 72 அடி உயர மகா பிரத்தியங்கிரா காளி கோவில் உள்ளது. இங்கு, பங்குனி  அமாவாசையையொட்டி, நேற்று ‘சர்வ சத்ரு சம்ஹார பரிகார ஹோமம்’ நடந்தது. இதனை முன்னிட்டு, காலை 9.00 மணிக்கு பிரத்தியங்கிராகாளிக்கு,  சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, 12.00 மணிக்கு கலச பூஜையும், 12.30 மணிக்கு  ‘சர்வ சத்ரு சம்ஹார பரிகார ஹோமம்’ நடந் தது. இதில், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நடாதுார்  ஜனார்த்தன சுவாமி, மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !