சமயபுரம் மாரியம்மன் ரதம் சங்கராபுரம் பகுதிக்கு வருகை!
ADDED :3519 days ago
சங்கராபுரம்: சமயபுரம் மாரியம்மன் ரதத்திற்கு, சங்கராபுரத்தில் சிறப்பு ஆராதனை நடந்தது. இந்து கலாசார சமிதி சார்பில், சமயபுரம் மாரியம்மன் ரதம், நேற்று முன்தினம் சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூரை வந்தடைந்தது. பின்னர் அம்மன் விக்ரகத்திற்கு பால்,மஞ்சள், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருபாகரன், ரத ஒருங்கிணைப் பாளர் மணிவேல், தலைவர் ராஜா, கண்ணன், சுப்ரமணி மற்றும் கிராம மக்கள் வழிபட்டனர்.