உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை கோவில்களில் இன்று யுகாதி சிறப்பு பூஜை

உடுமலை கோவில்களில் இன்று யுகாதி சிறப்பு பூஜை

உடுமலை: தெலுங்கு வருட பிறப்பான இன்று, உடுமலையில் கோவில்கள் மற்றும் அமைப்புகள் சார்பில், யுகாதி விழா கொண்டாடப்படுகிறது. உடுமலை, சோமவாரப்பட்டி, பெதப்பம்பட்டியில் அமைந்துள்ளது, தண்டபாணி, கிருஷ்ணமூர்த்தி, பகவதி அம்மன் மற்றும் ரேணுகாதேவி கோவில். கோவிலில், யுகாதி பண்டிகை விழா, ஏப்.,1ல் துவங்கியது. நேற்று மாலை, திருமூர்த்திமலையில் இருந்து தீர்த்த காவடிகள் எடுத்துவரப்பட்டன. இன்று அதிகாலை, 4:00 மணிக்கு, மகா கணபதி ேஹாமம், நவநாயகர் சாந்தி, சக்தி ேஹாமம் நடக்கிறது. காலை, 7:30 மணிக்கு, திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து, கோபூஜை, அஸ்வ, தீப, கன்னி, சுமங்கலி, தம்பதி, ராஜ, சாது மற்றும் பூரண கும்ப தரிசனமும், ஊஞ்சல் உற்சவம், கண்ணாடி பூஜை ஆசீர்வாதமும் நடக்கிறது. உடுமலை ரேணுகாதேவி ஆன்மிக அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் சார்பில், காந்திநகர், எம்.ஜி.லே-அவுட்டில் உள்ள, ரேணுகாதேவி புற்றுக்கோவிலில், யுகாதி பண்டிகை விழா, கொண்டாடப்படுகிறது. ஏப்., 1ல் துவங்கிய விழா, இன்று நிறைவடைகிறது.

அம்மனுக்கு தினமும், அபிேஷகம், பூஜைகள் நடந்தன. ஏப்., 1 முதல் ஏப்., 7 ம் தேதி வரை, தினமும் மாலை, 6:00 மணிக்கு, இன்னிசை நிகழ்ச்சி, பட்டிமன்றம், பக்தி இசை, ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்தன. தெலுங்கு வருட பிறப்பான இன்று, உடுமலை - பழநி ரோட்டில் உள்ள, ஜி.வி.ஜி., கலையரங்கில், அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு, அண்ணாகுடியிருப்பில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து, மாப்பிள்ளை அழைப்பும், ரேணுகாதேவி திருக்கல்யாண உபன்யாசம், விநாயகர் பூஜை, யுகாதி பூஜை மற்றும் அலங்கார பூஜை நடக்கிறது. இதைதொடர்ந்து, ஜமதக்னி மகரிஷி - ரேணுகாதேவிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. திருக்கல்யாணத்தை தொடர்ந்து, கண்ணாடி தரிசனம், ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. உடுமலை கவரநாயுடு சமூக நலச் சங்கம் சார்பில், வ.உ.சி., வீதியில் உள்ள ராமய்யர் திருமண மண்டபத்தில் நான்காமாண்டு யுகாதி விழா இன்று நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு, யுகாதி திருநாள் பூஜைகள் நடக்கின்றன. மதியம், 1:30 மணிக்கு, ஸ்ரீ கிருஷ்ண நாட்டியம் மற்றும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும், மாலை, 4:00 மணிக்கு, லக்கி கார்னர் நிகழ்ச்சியும் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !