ஜெனகை நாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
ADDED :3645 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை நாராயணப் பெருமாள் கோயிலில் 12 நாள் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. கருட உருவம் பொறித்த கொடியை பக்தர்கள் சுமந்து ரதவீதி சுற்றி கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். ரகுராம பட்டர் வேதம் முழங்க கோயில் கம்பத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னவாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் ஜெனகை நாராயணப் பெருமாள் வீதியில் எழுந்தருளினர்.ஏற்பாடுகளை கோயில் தக்கார் மாலதி, நிர்வாக அதிகாரி லதா செய்திருந்தனர்.