உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலுார் கண்ணகி கோவிலில் கொடியேற்றம்

கூடலுார் கண்ணகி கோவிலில் கொடியேற்றம்

கூடலுார்: கண்ணகி கோவிலில், சித்ரா பவுர்ணமி விழா, ஏப்., 22ல் நடைபெறுவதை முன்னிட்டு, கோவில் அடிவாரப் பகுதியான பளியன்குடியில் மார்ச்.,10ல் கொடியேற்றப்பட்டது.

தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ளது, மங்கலதேவி கண்ணகி கோவில். வரலாற்று சிறப்புமிக்க இங்கு, ஏப்., 22ல் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று, இக்கோவில் அமைந்துள்ள மலையின் அடிவாரப் பகுதியான கூடலுார் அருகே பளியன்குடியில், மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி, மாலை அணிந்து விரதம் துவக்கினர். முன்னதாக பொங்கல் வைத்து பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !