சிங்கவரம் கோவிலில் வழக்கம்போல் பூஜைகள்
ADDED :5186 days ago
செஞ்சி : சிங்கவரம் ரங்கநாதர் கோவில் வழக்கம் போல் பூஜைகள் நடந்து வருவதாக இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் தெரிவித்துள்ளார். மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் உதவி ஆணையர் குமரதுரை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவில் நிர்வாகம் மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மூலமே நிர்வகிக்கப்படுகிறது. இந்நிலையில் சிங்கவரம் ரங்கநாதர் கோவில் நடை சாத்தப்பட்டதாக தவறான தகவல்கள் வெளியாகி உள்ளன. பக்தர்கள் வழங்கம் போல் சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.