தினமும் கருட சேவை!
ADDED :3863 days ago
கோயில்களில் பெருமாள் நின்றும். இருந்தும் சயனித்தும் காட்சி தருவதை தாம் தரிசித்திருப்போம். விழாக் காலங்களில் மட்டுமே பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து காட்சி தருவார். ஆனால், தஞ்சாவூர்-திருவாரூர் சாலையில், முகுந்தனூர் அருகில் உள்ள எண்கண் என்ற தலத்தில் உள்ள ஆதி நாராயணப் பெருமாள் கருடன் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அந்த வகையில், இந்தக் கோயிலில் தினமும் கருட சேவைதான்.