உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமண முத்துக்கள்

ரமண முத்துக்கள்

அருளின் உயர்ந்த வடிவம் மவுனமாக இருப்பதாகும். வலிமையற்ற மனம் படைத்தவர்களால் மவுனமாக இருக்க முடியாது.  நான் யார் என்ற கேள்வியைக் கேளுங்கள். பதிலை உங்களுக்குள்ளே தேடுங்கள். பிறவியைத் தவிர்க்கும் உபாயம் இதுவே! குப்பையை ஆராய்வதால் பயன் விளைவதில்லை. அதுபோல, பிரபஞ்சத்தை ஆராய்வதாலும் பயன் இருக்கப் போவதில்லை. நமக்குள் இருந்து இயக்கும் ஆண்டவனைத் தேடுங்கள். இறைவன், நமக்குள் இருக்கிறான் என்று தெளிவாக உணர்ந்தவர்கள் தவறு செய்வதில்லை. தெரியாமல் தவறு செய்துவிட்டாலும் அதற்காக வருந்தி உடனே தங்களைத் திருத்திக் கொள்வார்கள். அகந்தை இருக்குமிடத்தில் ஆண்டவன் ஒரு நிமிடம்கூட இருக்கமாட்டான். நான், எனது என்று ஆணவத்தோடு எண்ணிக் கொண்டு செயலாற்றுபவர்கள் ஒருக்காலும் ஆண்டவனை அடையவே முடியாது. ரயில் ஓடும்போது அதில் பயணிக்கும் நாம் நம் சுமையைத் தூக்க வேண்டியதில்லை. அது போல, ஆண்டவனிடம் நம்மை ஒப்படைத்த பின்பு, உலகியல் பிரச்னைகள் நம்மை அழுத்துவதில்லை. அரைகுறையாக ஆண்டவனை நம்புவதால் ஒரு பயனும் இல்லை. முழுமையாக சரணாகதி அடைந்தால் அவன் பார்வை நம் மீது விழும். உணவுப் பொருட்களை வீணடிப்பது வறுமையை உதாசீனம் செய்கிற செயல் மட்டுமல்ல, உழைப்பை அவமதிக்கிற செயலாகவும் கருதப்பட வேண்டும். மனத்தில் வேற்றுமை இல்லாமல் மண்ணுலகில் இருக்கின்ற அனைத்தையும் நேசித்திடும் ஒருவனே ஆண்டவனை சரியாகத் தொழுபவன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !