உள்ளூர் செய்திகள்

யானை மனசு!

ஒரு நாளின் பெரும்பான்மையான நேரத்தில் நடந்தபடியே இருக்கும் மிருகம் - யானை என்னதான் அதைப் பிடித்து வைத்து ஓரிடத்தில் நிற்கப் பழக்கப்படுத்தி இருந்தாலும் பாவனையாகவாவது நடப்பதுபோல் கால்களை மாற்றி மாற்றி வைத்து அசைந்துகொண்டே இருக்கும். அதுதான் அதன் இயல்பு! ஆனால், அதன் துதிக்கையில் சின்னதாக மரத்துண்டையோ, ஏதாவது கழியையோ கொடுத்து விட்டால், அது தன் அசைவுகளை நிறுத்திகொண்டு அந்தப் பிடிப்பில் கவனமாக இருக்கும். இந்த யானையைப் போன்றதே நம் மனம், கழி அல்லது மரத்துண்டு என்பது இறைவனின் திருநாமம் அல்லது, இறைவனின் திருவுருவம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !