நிஜபாத தரிசனம்!
ADDED :3863 days ago
பிரதி வெள்ளிக்கிழமை அபிஷேகத்திற்குப் பிறகு அபிஷேக சேவையில் பங்கு கொள்ளும் க்ருஹஸ்தர்கள் எம்பெருமானை தரிசித்து சென்ற பின்னர் நிஜபாத தரிசனம் தொடங்கும். ஆர்ஜித கட்டணத்தை செலுத்திய பக்தர்கள் இச்சேவையில் பங்கு கொண்டு வெங்கடேஸ்வர ஸ்வாமியின் நிஜபாதத்தை எவ்வித கவசமும் இல்லாது தரிசிக்கலாம். இந்த தரிசனத்தில் மட்டுமே எம்பெருமானின் நிஜபாதங்கள் தரிசிக்க ஏதுவாகிறது. மற்ற வேளைகளில் அந்த பாதங்களுக்கு தங்கக் கவசம் வேயப்பட்டிருக்கும்.