உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அண்ணாமலையார் கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பு

அண்ணாமலையார் கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. தமிழ் புத்தாண்டான துர்முகி ஆண்டு பிறப்பை முன்னிட்டு, அண்ணாமலையார் கோவிலில், நேற்று அதிகாலை, 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தங்கம் கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. சித்திரை ஆண்டு பிறப்பு என்பதால், அதிகாலை முதலே கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். சிவாச்சாரியார்கள் காலை, 9 மணிக்கு, சுவாமி தங்க கொடி மரம் அருகில், சம்பந்த விநாயகர் சந்நதியில் பஞ்சாங்கம் வாசித்தனர். இதில் கோவில் இணை ஆணையர் வாசுநாதன், சிவாச்சாரியார்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மேலும், பக்தர்கள் அதிகாலை முதலே கிரிவலம் வந்து, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !