திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் விமரிசையான கருடசேவை!
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை கருட சேவை நடைபெற்றது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் ÷ காவிலில் சைத்ர பிரம்மோற்சவம் கடந்த, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நிகழ்ச்சியின் மூன்றாவது நாளான நேற்று காலை, 4:00 மணிக்கு கருட சேவை மற்றும் கோபுர தரிசனம் நடந்தது. உற்சவர் வீரராகவர் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், காலை, 5:30 மணிக்கு திருவீதி உலா நடந்தது. இரவு ஹனுமந்த வாகனம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, பக்தர்கள் அதிகாலை முதல் கோவிலில் குவிந்து, சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை, 6:00 மணிக்கு சேஷ வாகனம், இரவு, 7:00 மணிக்கு சந்திரபிரபை நடக்கிறது. திருமஞ்சனம் இங்குள்ள ராமர் சன்னிதியில், ஸ்ரீராம நவமியை முன்னிட்டு திருமஞ்சனம் நடந்தது. மாலை, ராமன் திருக்கோலத்துடன் பத்தி உலா நடைபெற்றது.