உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!

திரவுபதியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!

புதுச்சேரி: லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவிலில், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவிலில் தமிழ் வருடப் பிற ப்பை முன்னிட்டு, கோவிலில் உள்ள பார்த்தசாரதி பெருமாளுக்கு இரவு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை  6:00 மணிக்கு, கருட சேவையில் பார்த்தசாரதி பெருமாள் அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து திரவுபதியம்மனுக்கும், அர்ச்சுனனுக்கும் திரு மஞ்சனம், திருவாராதனம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும்  பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !