மொரட்டாண்டி முத்துமாரியம்மன் கோவிலில் 108 பால்குட அபிஷேகம்
ADDED :3501 days ago
புதுச்சேரி: மொரட்டாண்டி முத்துமாரியம்மன் கோவிலில் வரும் 21ம் தேதி, 108 பால்குட அபிஷேகம் நடக்கிறது. விழுப்புரம் மாவட்டம், வானுார் மொரட்டாண்டி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, வரும் 21ம் தேதி, கோவிலில் பாலாலயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை 9:00 மணிக்கு, கிராம மக்கள் 108 பால் குடம் ஊர்வலமாக கொண்டு சென்று, சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் துவங்குகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழு மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.