பிரத்யங்கிரா தேவி கோயிலில் உலக நன்மைக்காக நிகும்பலா யாகம்
ADDED :3501 days ago
பனைக்குளம்: உச்சிப்புளி அருகே அரியமான் கடற்கரை செல்லும் வழியில் உள்ள உக்கிர பிரத்யங்கிரா தேவி கோயிலில் உலக நன்மைக்காகவும், வெயிலின் தாக்கத்திலிருந்து மக்கள் பாதுகாக்கவும் வேண்டி நிகும்பலா யாகம் நடந்தது. மூலவர் பிரத்யங்கிரா தேவிக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் நெய்விளக்கேற்றி, சக்தி ஸ்தோத்திரம் பாடி வழிபாடு செய்தனர். கலசாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் பழனிவேலு, சென்னை சியாமளாதேவி ஆகியோர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது.