தாராசுரம் கோவிலில் பாரம்பரிய கண்காட்சி
ADDED :3501 days ago
தஞ்சாவூர்: யுனஸ்கோ எனப்படும், ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பால், உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள, கும்பகோணத்தை அடுத்த, தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோவிலில், தொல்லியல் துறை சார்பில், சோழர் கால கோவில்கள் என்ற தலைப்பில், புகைப்படக் கண்காட்சி நேற்று துவங்கியது. இந்த கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது; இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இதை, புதுச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத் துறை போராசிரியர் ராஜன் துவங்கி வைத்தார். சென்னை வட்ட உதவி தொல்பொருள் ஆய்வாளர் ரமேஷ், தஞ்சை வட்ட உதவி தொல்பொருள் துறை உதவி பாதுகாப்பாளர் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். வரும், 24ம் தேதி வரை கண்காட்சி நடைபெறுகிறது.