சின்னமனூரில் இன்று திருக்கல்யாணம்
ADDED :3501 days ago
சின்னமனுார்: சின்னமனுாரில் சிவகாமியம்மன் - பூலாநந்தீஸ்வரர் சித்திரை திருக்கல்யாணம் இன்றும், தேரோட்டம் நாளையும் நடக்கிறது. சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று பகல் 11மணி முதல் 12 மணிக்குள் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை அறநிலையத்துறை தக்கார் பாலசுப்ரமணி, நிர்வாக அலுவலர் செந்தில் குமார் செய்துள்ளனர். இன்று மாலை நான்கு ரதவீதி வழியாக சுவாமி ஊர்வலம் நடைபெறும். நாளை மாலை தேரோட்டம் துவங்கும். பக்தர்கள் வடம் பிடிக்க கண்ணாடி கடை முக்கில் நிலை நிறுத்தப்படும். நாளை மறுநாள் தேர் நிலை வந்தடையும்.