உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் 21ம் தேதி திருவிளக்கு பூஜை

பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் 21ம் தேதி திருவிளக்கு பூஜை

ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், 17ம் ஆண்டு திருவிளக்கு பூஜை வரும், 21ம் தேதி, நடைபெற உள்ளது. ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில். இக்கோவிலில், சித்திரை மாத பவுர்ணமி நாளில் நடைபெறும் திருவிளக்கு பூஜை. வரும், 21ம் தேதி, 17ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. காலை, கணபதி, முருகர், வால்மிகீஸ்வரர், அன்னை மரகதாம்பிகை உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். மாலை, 4:00 மணிக்கு மரகதாம்பிகை தாயாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். இதை தொடர்ந்து, திருவிளக்கு பூஜை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !