திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா!
ADDED :3501 days ago
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் பெரியகுளத்தின் கீழக்கரையில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் 23ம் ஆண்டு தீ மதி திருவிழா நடந்தது. அதனைத் தொடர்ந்து தினமும் அபிஷேக ஆராதனை இரவு சுவாமி வீதியுலாவும் நடந்தது. பிரம்மர், கர்ணன், தர்மராஜன், துரோனாச்சாரி பள்ளிக்கூடம், அர்ச்சுனன் வில் வளைப்பு, திரவுபதி கல்யாணம் ஆகிய நிகழ்வுகள் நடந்தது. தொடர்ந்து முக்கிய விழாவான தீ மிதி விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.