உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரை தேரோட்டம்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரை தேரோட்டம்

மயிலாடுதுறை: திருக்கடையூர், அமிர்தகடேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. நாகை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த திருக்கடையூரில், அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. தேவார பாடல் பெற்றதும், மார்க்கண்டேயனுக்காக சுவாமி, எமனை சம்ஹாரம் செய்த தலமான இங்கு ஹோமம் செய்து வழிபட்டால், ஆயுள் விருத்தி ஏற்படும் என்பது ஐதீகம். இக்கோவிலின் சித்திரைத் திருவிழா, 12ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி, நடைபெற்று வருகிறது. நேற்று, தேர் திருவிழா நடைபெற்றது. அலங்கரித்த தேரில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளினர். காலை, 8:25 மணிக்கு, நாகை கலெக்டர் பழனிசாமி தேரை வடம் பிடித்து, தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, நமசிவாயா என கோஷமிட்டவாறு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !