ரங்கநாதசுவாமி கோவிலில் கருடசேவை உற்சவம்!
ADDED :3501 days ago
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே இடிகரையில், பள்ளிகொண்ட ரங்கநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், சித்ரா பவுர்ணமியையொட்டி தேர்திருவிழா நடக்கும். இந்தாண்டுக்கான திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அன்னவாகனம், அனுமந்த வாகனங்களில் ரங்கநாதசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் கோவிலிலிருந்து கொண்டு வரப்பட்ட, மாலை அணிந்த ரங்க நாதசுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளினார். திருக்கல்யாண உற்சவம், புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாளை காலை, 10:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, பரிவேட்டை, குதிரை வாகன உற்சவம், சேஷ வாகன உற்சவம், தெற்போற்சவம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.