உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திரையில் சூரியபூஜை

சித்திரையில் சூரியபூஜை

கடலூர் மாவட்டம், பண்ருட்டிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருத்துறையூர். மேற்கு திசைநோக்கிய இக்கோயிலின் மூலவர் ஸ்ரீசிஷ்ட குருநாதர், அம்பாள் சிவலோக நாயகி. இங்கு சிவபெருமான் குருவாக அமர்ந்து அருள்புரிகிறார். இத்தலத்தில்தான் சுந்தரருக்கு குருவாக அமர்ந்து உபதேசம் செய்தார் சிவபெருமான். இங்கு ஒவ்வோர் ஆண்டும். சித்திரை 5ம் தேதியிலிருந்து 10 ம் தேதி வரை மாலை சூரிய அஸ்தமான வேளையில் சூரியனின் கதிர்கள் சுமார் 15 நிமிடங்கள் லிங்கத்தில் படரும் காட்சியைத் தரிசிக்கலாம். அந்த வேளையில் இறைவனை வழிபட அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !