உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஞ்சள் விற்ற சப்தமாதர்!

மஞ்சள் விற்ற சப்தமாதர்!

திருச்சி, லால்குடியை அடுத்த மணக்கால் கிராமத்தில் அமைந்துள்ளது மணக்காயி அம்மன் கோயில் என்று அழைக்கப்படும் சப்தமாதர் கோயில். வணிகர் ஒருவர் மஞ்சள் வியாபாரம் செய்வதற்காக ஊர் ஊராக சென்றபோது, சப்தமாதர்களும் அவருடன் சென்று மஞ்சள் விற்க உதவி செய்தனர். ஆகவே, அவர்களுக்கு இத்தலத்தின் ஆற்றங்கரையில் கோயில் கட்டி அந்த வணிகன் வழிபட்டான் என்கிறது கோயில் தல வரலாறு. பொதுவாக, சிவன்கோயில்களில் வடக்கு நோக்கி அருளும் சப்தமாதர்கள், இங்கு கிழக்கு நோக்கி அமைந்திருப்பது விசேஷம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !