திருவந்திக் காப்பு
ADDED :3855 days ago
மனிதருக்கு மட்டுமல்ல, இறைவனுக்கும் திருஷ்டி கழிக்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் அழகைக் காண்பவர்கள் அவரது அழகை சிலாகிக்காமல் விடுவதில்லை. இறைவனை திருஷ்டி பாதிக்காது என்றாலும், இறைவனின் மேல் உள்ள அன்பால் திருஷ்டி கழித்தல் எனும் சடங்கு இங்கு நடைபெறுகிறது. இங்கு ஐந்தாவது பிராகாரத்தில் உள்ள நான்கு கால் மண்டபத்தின் நடுவில் ஒரு சிறு குடத்தை வைத்து, அதன் மேல் ஒரு கிண்ணத்தில் திரியிட்டு தீபம் ஏற்றி பெருமாளுக்குக் காட்டுவார்கள். இதனை, திருவந்திக் காப்பு என்று சொல்வர். இப்படி செய்வதால் பெருமாள் மீதுள்ள திருஷ்டி கழிவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.