அரச மரத்தில் அதிசய கணபதி: பக்தர்கள் பரவசம்!
ADDED :3503 days ago
பொள்ளாச்சி: கோவில் அரச மரத்தில் விநாயகர் உருவம் தெரிந்ததால், பக்தர்கள் பரவசம் அடைந்தனர். பொள்ளாச்சி தெப்பக்குளம் வீதி, ராமர் கோவில் வீதி சந்திப்பில் அரச மரத்தடியில் ராஜ கணபதி கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள அரச மரத்தின் அடிப்பகுதியில், வேர்கள் வளர்ந்து, விநாயகர் வடிவில் காட்சியளித்துள்ளது. இதை கண்டறிந்தவர்கள் அப்பகுதி மக்களிடம் தெரிவிக்க, அப்பகுதியினர் வந்து அதைப்பார்த்து பரவசமடைந்தனர். மர விநாயகருக்கு கண் மலர் சாற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.