உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரராகவர் கோவில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம்

வீரராகவர் கோவில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம்

திருவள்ளூர்: திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவிலில், நேற்று நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், புனித நீராடி பெருமாளை வழிபட்டனர். திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவிலில், சைத்ர பிரம்மோற்சவம் ஏப்., 13ம் தேதி துவங்கியது. காலை, மாலை இரு வேளைகளில் உற்சவர், வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் உற்சவருக்கு திருமஞ்சனம், பத்தி உலா நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சைத்ர பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி, நேற்று, காலை 10:30 மணிக்கு கோவில் குளத்தில் நடைபெற்றது. காலை 10:30 மணிக்கு, சக்கரத்தாழ்வார் குளத்தில் புனித நீராடும் போது, குளக்கரையில் திரண்டிருந்த பக்தர்களும் நீராடினர். பின், பிற்பகல் 3:00 மணிக்கு திருமஞ்சனமும், பத்தி உலா இரவு 7:00 மணிக்கும், விஜயகோடி விமானத்தில் புறப்பாடு, இரவு, 8:00 மணிக்கும் நடைபெற்றது. இரவு 10:30 மணிக்கு திருமொழி சாற்றுமறை, ரத்னாங்கி சேவையும் நடைபெற்றன. இன்று இரவு 10:00 மணிக்கு, கண்ணாடி பல்லக்கு புறப்பாடும், நள்ளிரவு 12:30 மணிக்கு கொடியிறக்கப்பட்டு பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !