உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போடியில் கோவிந்தா கோஷத்துடன் கொட்டகுடி ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

போடியில் கோவிந்தா கோஷத்துடன் கொட்டகுடி ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

போடி: போடியில் சீனிவாசப் பெருமாள் கள்ளழகர் வேடத்தில் பச்சை பட்டு உடுத்தி கோவிந்தா.. கோவிந்தா.. என்ற கோஷத்துடன் கொட்டகுடி ஆற்றில் இறங்கினார். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு போடி சீனிவாசப்பெருமாள் கள்ளழகர் வேடத்தில் பச்சை பட்டு உடுத்தி கோவிந்தா கோஷத்துடன் கொட்டகுடி ஆற்றில் காலை 6.30 மணியளவில் இறங்கினார்.  அதன் பின் புதூர், நகராட்சி அலுவலகம் ரோடு, தேனி ரோடு, கீழத்தெரு உள்ளிட்ட தெருக்களில் சுவாமி நகர்வலம் வந்து அருள்பாலித்தார்.  நாயுடு மற்றும் நாயக்கர் மத்திய சங்கத்தலைவர் வடமலைராஜையபாண்டியன் தலைமையில் நடந்தது.  முன்னாள் தலைவர் குமரன், முன்னாள் விவசாயிகள் சங்க தலைவர் கட்டாரி பாண்டியன், மத்திய சங்க செயலாளர் சுருளிராஜ் முன்னிலை வகித்தனர்.  ஏற்பாடுகளை நாயுடு மற்றும் நாயக்கர் சங்க இளைஞர் அணியினர், மத்திய சங்க நிர்வாகஸ்தர்கள் செய்திருந்தனர்.  சுவாமி அலங்காரங்களை கார்த்தி பட்டாச்சியர் குழுவினர் செய்திருந்தனர்.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா.... கோவிந்தா... என்ற கோஷ்த்துடன் கள்ளழர் வேடத்தில் இருந்த சீனிவாசப்பெருமாளின் அருளாசி பெற்றனர்.   ஏற்பாடுகளை கோயில் தக்கார் பாலகிருஷ்ணன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !