மவுனகுரு சுவாமி கோயில் கருவறையில் காய், கனி அலங்காரம்!
ADDED :3504 days ago
கசவனம்பட்டி: திண்டுக்கல் கசவனம்பட்டியில் அமைந்துள்ளது ஜோதி மவுனகுரு சுவாமி திருக்கோயில். சிகரெட் சாம்பலுடன், சிறிது விபூதியைச் சேர்த்து பிரசாதமாக தரும் இங்கு , பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை சீட்டில் எழுதி, கையில் வைத்தும் வழிபடும் வழக்கம் இருக்கிறது. இக்கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கருவறையில், காய், கனி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.